view counter

Monday 7 January 2013

AR muragadoss,Sasikumar & Gautham menon

சென்னை: அஜீத், விஜயை நிராகரிக்கும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனன் அஜீத் குமார், விஜய் ஆகிய இரண்டு பேரையும் வைத்து படம் எடுக்க பிரியப்படவில்லை என்று ஒரு காலத்தில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் கௌதம்.
அப்போது அவர் கூறுகையில், நான் மட்டுமல்ல சசிகுமார் மற்றும் ஏ.ஆர். முருகதாஸும் அஜீத் குமார் மற்றும் விஜயை வைத்து படம் எடுக்க ரெடியாக உள்ளனர். அஜீத், விஜயை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. அவர்கள் என் படத்தில் நடிக்க ஆசைப்பட்டால் அவர்களை இயக்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்த பேட்டியை அடுத்து இனி யாரும் கௌதமை விமர்சிக்க முடியாதல்லவா. அனைத்து இயக்குனர்களும் அஜீத், விஜய்க்கு அடிபோட்டால் பிற நடிகர்கள் யாரப்பா இயக்குவது.

No comments:

Post a Comment